
யாழ்.வட்டுக்கோட்டை – செட்டியார்மடம் பகுதியில் இருவரிடம் வழிப்பறி கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதா கூறப்படும் நிலையில் அவ்வீதியால் பயணிப்போர் அவதானமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதயில் வீதியால் சென்ற இருவரிடம் கை பைகள் வழிப்பறி கொள்ளையர்களால் பறித்துச் செல்லப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரிடமும் கைப்பைகளை கொள்ளையடித்துச் சென்றவர்கள் ஒரே தரப்பைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.