
யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞர் ஒருவருக்கு வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவமானது இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வர சந்தியில் வழி மறித்து கடுமையாக வாளினால் வெட்டியுள்ளனர்.
கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைகழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும் , துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இலக்கண குறித்த இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் அனைவரும் தப்பியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.