மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், யாழ்.மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

588 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதில் யாழ்.மாநகரில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்.

மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் பொலிஸ் அதிகாரிகள் ஆவார்.

அதேபோல் சண்டிலிப்பாயில் இருவருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal