இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சம்ப்ரீத்தி யாதவ்-க்கு (Sampreeti yadav) ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக பிரபல நிறுவனமான கூகுள் (Google) அறிவித்துள்ளது.

யார் இந்த சம்ப்ரீத்தி?

இந்தியா மாநிலமான பீகாரின் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரியான ராமசங்கர் யாதவ் – திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குனரான ஷிஷி பிரபா தம்பதியின் மகளான சம்ப்ரீத்தி யாதவ் கடந்த 2014 ஆம் ஆண்டு புகழ்பெற்ற நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் 10 CGPA மதிப்பெண் உடன் பள்ளிக் கல்வியை முடித்தார்.

பின்னர், டெல்லி இன்டர்நெஷனல் பள்ளியில் (International School) 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்று பின்னர் 2016 ஆம் ஆண்டு JEE மெயின்ஸ் தேர்வில் சம்ப்ரீத்தி வெற்றிபெற்றிருக்கிறார்.

மேலும், டெல்லி டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் பிடெக் படிப்பை 2021 மே மாதம் சம்ப்ரீத்தி முடித்திருக்கிறார். வேலை வழங்கிய முன்னணி நிறுவனங்கள் பிடெக் படிப்பை முடித்த கையோடு அடோப், பிளிப்கார்ட் ஆகிய முன்னணி நிறுவனங்கள் இவருக்கு வேலை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தன.

பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனம் (Microsoft Corporation) நடத்திய நேர்காணலில் தேர்ச்சிபெற்று அந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த சம்ப்ரீத்தி தற்போது ஆண்டுக்கு 44 லட்சம் ரூபாய் ஊதியம் பெற்றுவருகிறார்.

கூகுள் நிறுவனத்தின் அழைப்பு :

இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக சம்ப்ரீத்தி விண்ணப்பிக்க, உடனடியாக ஆன்லைன் மூலமாக நேர்காணலுக்கு கூகுள் நிறுவனம் அழைத்திருக்கிறது.

மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த நேர்காணல் அனைத்திலும் அவர் தேர்ச்சி பெறவே, ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக கூகுள் அறிவித்துள்ளது.

தனது சொந்த முயற்சியின் மூலமாக, கூகுளில் விண்ணப்பித்து வேலை பெற்ற சம்ப்ரீத்தி சீக்கிரத்தில் லண்டனில் உள்ள கூகுள் நிறுவனத்தில் தனது பணியைத் துவங்கவுள்ளார்.

கோடிகளில் ஊதியம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள ஐஐடி-களில் கேம்பஸ் இண்டர்வ்யூக்கள் நடைபெறுவது குறைந்திருந்து.

ஆனால், இந்தாண்டு உலகின் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஆட்களைத் தேர்வு செய்துவருகின்றன. கோடிகளில் சம்பளம் தரவும் இவர்கள் தயாராக இருக்கின்றனர்.

பிரபல ஆன்லைன் வாடகை டாக்சி நிறுவனமான ஊபர், கடந்த வாரம் ஐஐடி புவனேஸ்வரைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் தரத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal