லண்டன் நகர வீதியொன்றில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சுதந்திரமாக, தன்னந்தனியாக நடமாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அது தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டுள்ளது.

சந்திரிகா அன்றும் இன்றும் ஆளைச்சுற்றி பத்து MSD, பதினைஞ்சு SF, இருபது STF, இருபத்தைஞ்சு பொலிசு, நாற்பது பாதுகாப்பு அதிகாரிகள் என ஒரு திருவிலா ஊர்வலமே வருவதற்கு இது ஒன்றும் நம்ம நாடு இல்லை என்று சமூக வைத்தளங்களில் விமர்சனம் முன்வைக்கப் பட்டுள்ளது, யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே தொடரும் அந்த வமர்சனத்தில் 

ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்தபோது ISGA எனப்படும் உள்ளக சுய ஆட்சி அதிகாரசபையை புலிகளின் தலைமைக்கு பாராளுமன்ற அதிகாரம் ஊடாக வழங்கினார் என்ற காரணத்தினால் இரண்டுநாட்களில் அவரது பிரதமர் பதவியைப் பறித்து ரணிலின் அரசைக்கலைத்து மகிந்த ராஜபக்ச வின் அரசை நிறுவினார் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா.

இன்று அரசியல் வரலாற்று உண்மைகள் தெரியாதவர்கள் சந்திரிக்கா அமையாரை புகழ்ந்து தமிழர் விழாக்களின் கதாநாயகியாக அலங்கரிக்கிறார்கள்.

சந்திரிக்கா காலத்தில் நடந்த அட்டூளியங்களை தமிழர்கள் மறந்து விட்டார்கள், அதற்காக ரணில் புனிதர் அல்ல அவரும் இவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல அது மட்டுமல்லாது தமிழர்களின் இந்த நிலைக்கு அவரே காரணம், இவையும் தெரியாத தமிழர்கள் ரணில் மாத்தையா நல்லவர் என்பார்களே.

மகிந்த – கோட்டாபய அரசும் அன்று இவர்கள் செய்ததையே செய்கிறது, எப்படித்தான் தமிழ் தலைவர்கள் தென்னிலங்கை அரசியல் தலைவர்களை நம்புகிறார்களோ கடவுளே என ஒருவர் முகநுாலில் பதிவிட்டுள்ளார்.

Gallery
Gallery
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal