
நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் மோட்டர் சைக்கிள் வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகரையைச் சேர்ந்த 30 வயதுடைய ஆனந்தராஜா பார்த்தீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.