மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர். மழையில் நனைந்தபடி கடலில் உயிருக்கு ஆபத்தான முறையில் வந்தவர்களை கடலோர காவல் அதினாரிகள் மீட்டு காவல் நிலையத்திலேயே தங்கதுள்ளனர்.

மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், தனி நபர் ஒருவருமாக 18 பேர் தமிழகம் சென்று சேர்ந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏற்கனவே 42 பேர் இலங்கையிலிருந்து படகுமூலம் தமிழகம் சென்றிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

“இனி இலங்கைக்குச் செல்ல மாட்டோம் – தமிழகத்தில் ஒரு ஓரமாக வாழ்ந்து கொள்கிறோம்” என இவர்கள் கண்ணீருடன் தெரிவித்ததாக இந்திய இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal