
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் மூவரைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் காரைநகர் தீவின் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்களே காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் கூறுகின்றனர்.
குறித்த மூவரும் மீன்பிடிப்பதற்காகச் சென்ற நிலையில் எதுவித தொடர்புகளுமின்றி காணாமல் போனதுடன் இவர்களைத் தேடும் பணியில் கடற்படையினரும் மீனவர்களும் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.