
இராணுவ ஆட்சிக்கு எதிரான மியன்மாரின் போராட்டத்தில் ஈடுபட்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாங்கூன் நகரின் இன்செயின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் எனவும் போராட்டத்தின் சின்னமான மூவிரல் வணக்கம் செலுத்தியவாறு அவர்கள் உற்சாகத்துடன் சிறையிலிருந்து வெளியே வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.