இந்தியாவின் தேர்தல் பிரசாரத்தில் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற சிங்கள பாடலின் மெட்டில் பாடல் இசைக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் இந்திய பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஆகியோருக்கு வாக்களிக்குமாறு கோரும் வகையில் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன.
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தின் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையிலேயே இந்த பாடல் மூலம் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடாபில் மேலும் தெரியவருகையில்,

இந்திய மத்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி, தென்னிலங்கையின் பாடகி யொஹானி டி சில்வா பாடிய “மெனிகே மகே ஹித்தே” என்ற சிங்கள பாடலின் மெட்டில் அமைந்த பாடலை உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் தேர்தல் பாடலாக பயன்படுத்தி வருகிறது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
“மெனிக்கே மகே ஹித்தே” சிங்கள பாடலின் மெட்டில் அமைந்துள்ள இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய ஆதரவு கிடைத்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.