
தேவையான பொருட்கள்:
- மாங்காய் – 2
- சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
- சர்க்கரை – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- நன்கு முற்றிய மாங்காயைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, அதை மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.
- வடிகட்டிய மாங்காய்ச் சாறுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
- மாங்காய் பாகு கொதித்து வரும் போது சீரகத்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இறக்கவும்.
- ஒரு கரண்டி மாங்காய் பாகு உடன் ஐஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொடுக்கலாம். விரும்பினால் கசகசா சேர்த்துக்கொள்ளலாம்.