
இன்று (வியாழக்கிழமை) காலை பெய்த கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
காலை தொடக்கம் மழையோடு கூடிய மந்தமான கால நிலை காணப்படுவதுடன், தொடர்ச்சியாக மழை பெய்வதற்குறிய அறிகுறிகளும் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும்
இந்த மழை காரணமாக மன்னார் தீவுப்பகுதியின் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சில வீதிகளில் நீர் தேங்கி காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.