
கடந்தாண்டு உலகளவில் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் மலேரியாவினால் சர்வதேச ரீதியில் 558,000 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் 627,000 பேர் மலேரியாவினால் மரணித்தனர்.
மலேரியாவால் பெரும்பாலான குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
சிகிச்சைகளில் ஏற்பட்ட சிறு தடங்கல்களே இந்த நிலைக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.