இந்­திய மேற்கு வங்க மாநி­லத்­தில் தனது தாயுடன் ஓடிப்போன கணவனை மீட்டுத்தரகோரி பெண் ஒருவர் பொலி­ஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிரியங்கா தாஸ். இவருக்கும் கிருஷ்ண கோபால் தாஸ் என்பவருக்கு 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கணவன் – மனைவி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். திருமணமான சில நாள்களில் கிருஷ்ண கோபால் தாஸ் தன் மனைவி பிரியங்காவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து அந்தப்பெண் ஊர் பஞ்சாயத்தை கூட்டினார். ஊர் பெரியவர்கள் இரண்டு குடும்பத்தை அழைத்து விசாரித்துள்­ளனர். கிருஷ்ண கோபால் தாஸ் தன் மனைவியை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய ஊர் பெரியவர்கள் அந்தப் பெண்ணின் தந்தை வீட்டில் சென்று இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்­துவிட்டார். அது அவருக்கும் பழகியும் விட்டது. சில நாட்­க­ளுக்கு பின்­னர் மனைவி தனியாக வசிக்கலாம் எனக் கூறியும் கோபால் தாஸ் வர மறுத்துவிட்டார். மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. பின்­னரே கணவனின் உண்மை முகம் தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிரியங்கா வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது தாய் ஷிபாலி தாஸூடன் கோபால் பேசி பழகி வந்துள்ளார். நாளடைவில் இந்தப்பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாமியார் – மருமகன் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

கடந்த 3 வருடமாக இந்த முறையற்ற உறவு தொடர்ந்து வந்துள்ளது. இதனை அந்தப்பெண் கண்டுபிடித்துவிட்டார். இதனையடுத்து தன் கணவன் மற்றும் தாயுடன் கடுமையாக சண்டை போட்டுள்ளார். இதற்கு மேல் இந்த வீட்டில் ஒரு நிமிடம் இருக்க முடியாது இங்கிருந்து போகலாம் என கணவனை அந்தப்பெண் அழைத்துள்ளார்.

கணவனோ இளம் மனைவியை கைவிட்டுவிட்டு மாமியாரை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். அந்தப்பெண்ணும் கணவனை தவிக்க விட்டு மருமகனுடன் குடித்தனம் நடத்த ஆரம்­பித்­துவிட்டார். மகளுக்கு துரோகம் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் மருமகனுடன் ஓட்டம் பிடித்துவிட்டார்.

இதனால் விரக்தியடைந்த பெண் தன் கணவனை கண்டுபிடித்து தரக்கோரி பொலிஸ்நிலைய படியேறினார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் இருவரையும் அழைத்து பொலிஸார் விசாரித்துள்ளனர். மருமகனுடன் மாமியார் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal