கச்சான் வாங்க வந்த பெண்ணொருவரை வியாபரிகள் அநாகரீகமாகப் புகைபடம் எடுத்த நிலையில் அதனைத் தட்டிகேட்கச் சென்ற கணவன் மீது வியாபாரிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது .

தனது கணவருடன் பொருட்கள் வாங்க சென்ற மனைவி,  கச்சான் வாங்க சென்றபோது சில வியாபாரிகள் பெண்ணை அநாகரீகமாக புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் இதனை அவதானித்த கணவர் , வியாபாரிகளுடன் முரண்பட்டபோது கணவர் மீது அவர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அண்மைக் காலமாக தமிழர் பகுதிகளில் இவ்வாறு அநாகரீகப்போக்கு அதிகரித்துள்ளது எனவும் இவ்விடயம் குறித்து அதிக கவனம் எடுக்கப்படவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிடுள்ளனர். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal