எழுதியவர் – கதிரவன் மதி

மதி இழந்து
மது பெற்று
பணம் இழந்தாய்…
அவனோ…
மதி மயக்கி
மது தந்து
பணம் படைக்கான்.
கொடுத்துப் பார்
போதை உண்டாகும்
அன்பு வை
போதை உண்டாகும்
கற்றுக் கொடு
போதை உண்டாகும்
அறிவை தேடு
போதை உண்டாகும்
இத்தனையும் இருக்கையிலே
அத்தனையும் உதறி விட்டு
அருவருக்கும் அந்த மருந்தை
ஆசையோடு குடிப்பது ஏன்?