
எழுதியவர் – தூரா.துளசிதாசன்
மஞ்சள்வெயில் மாலையில்
மனதை மயக்கிடும்
மஞ்சள் மயில் கொன்றையை
கொண்டையில் சூடி,
மஞ்சள்நிறம் மின்னிடும்
தோகையை விரித்தாடுது
மயிலொன்று…!
நெஞ்சமது கவிபாடுது
வஞ்சியவள் அழகில்
மதி மயங்கியே…
கெஞ்சிடும் என்மனதை
கொஞ்சிட வருவாளா..?
வெஞ்சின வெந்தழலில் அகப்பட்டு
துஞ்சிடும் கனவுப்பறவையை
வஞ்சிக்கொடியவள் மீட்டிடுவாளா..?
தஞ்சமென தரையில்
வட்டமடிக்கும் வண்ணத்துப்பூச்சியாய்
மனம் தன்
சிறகை விரிக்கிறது…
மஞ்சரி அவளின்
மஞ்சத்தில் சிக்கியே
மனப்பறவை தவிக்கிறது
நெப்பந்தஸ் குடுவையிடம்
தஞ்சமடைந்த வண்டாக…!
தூரா.துளசிதாசன்