
நாடகம், ஒபார நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்து பிரித்தானியாவின் ஒலிவியர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற இலங்கையரான இளம் நடிகர் ஹிரான் அபேசேகர இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹிரான் அபேசேகர இன்றிரவு கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல உள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.