
யாழ்ப்பாணம்-பொம்மைவெளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் நேற்று (29) இரவு பெண்கள் போதைப்பொருளை நுகர்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு பெண்களைக்கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் 28 மற்றும் 29 வயதுடையோர் எனவும் , அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.