பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மன்னம்பிட்டிய கொட்டாலிய பாலத்திலிருந்து ஹந்தப்பன நீர்பாயும் கால்வாயில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும், 3 ஆண்களும் அடங்குவதாகவும், உயிரிழந்தவர்களில் 10 பேரின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையிலும், ஒருவரது சடலம் மனம்பிடிய வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்திற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பேருந்தின் அதிவேக பயணமும், சாரதியின் கவனக்குறைவுமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, விபத்துக்குள்ளான பேருந்து நேற்று இரவு கிரேன் உதவியுடன் ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டடது.
பேருந்து விபத்தினால் காணாமல் போனவர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்பதை கண்டறியும் வகையில், பேரூந்து ஆற்றில் விழுந்த இடத்தில் நீர்மூழ்கிக் குழுவினர் தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விபத்துக் குறித்து மன்னம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal