
எழுதியவர் – .கா.ரஹ்மத்துல்லாஹ்…
பேசும் மழலையொருத்தி
ஏழைத் தகப்பனிடம்
பொம்மையொன்று
கேட்டுச் சலித்து
மறந்துபோயிருந்த தருணம்
அவளது கரங்களுள்
வந்து சேர்ந்ததொரு பொம்மை…
சில நாட்கள்
பேரின்பக் கடத்தல்களை
முடித்தபின்
அலங்காரப்பொருளாய்
அமர்ந்து கொண்டது அது…
இப்போது
மீண்டும் இரவு வேளைகளிலும்
விடுமுறை தினங்களிலும்
அப்பாவுடன்தான்
விளையாடிக் கொண்டிருக்கிறாள்
அவள்…