தொகுத்தவர்- பா. காருண்யா, மதுரை

- பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது.
- பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
- எறும்புகள் தூங்குவதே இல்லை.
- மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
- கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்.
- பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்.
- ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்.
- ஒட்டகம் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாகக் கண்டுபிடித்துவிடும்.
9.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
- நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை உறக்கம் கொள்ள முடியும்.
- மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவு சப்தம் வரைதான் தாங்கிக் கொள்ள முடியும்.
- பூனையின் கண்பார்வை மனிதனை விட எட்டு மடங்கு கூர்மையானது.
- காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல. அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
- உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
- பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை.
- முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது.
- அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
- நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, கடுமையான வெப்பத்தினைக் குறைத்து குளிர்ச்ச்சியைக் கொடுக்கிறது.
- பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
- உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.