
இன்று திங்கட் கிழமை ஆராதனையின் பின்னர் உரையாற்றிய பேராயர் கர்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள், ‘2021 ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் தவறினால் நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறும்’ எனத்தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் என ஆணைக்குழுவால் பெயரிடப்பட்டவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் எனவும் மக்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.