
உன்னத தியாகத்தின் மறுஉருவாய் சிலுவையில் தொங்கிய கிறிஸ்து இயேசுவின் பரிகார பலியை நினைவுகூரும் நாள் இன்று. இதனையே பெரிய வெள்ளி எனவும், புனித வெள்ளி எனவும் போற்றுகின்றோம். இன்றைய நாள் ஒரு அர்ப்பணிப்பின் நாளாகும். தேவகுமாரனுடைய பாடுகள் உலக மக்களின் விடுதலைக்கானது. அவர் அனைத்து மக்களையும் நேசித்தார். அனைத்து மக்களையும் இரட்சித்தார். தன் கோர மரணத்தில் மூலம் உலகத்திற்கு சமாதானத்தையும் விடுதலையையும் உண்டுபண்ணினார்.
இரட்சகர் யேசுவின் புனித நாளான இந்நாளில் அவருடைய வாஞ்சையின் படியாய் நாம் வாழவேண்டும் என தீர்மானம் செய்வோம்….