
ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 4 இலட்சத்து 13 350 ரூபாய் பணத்துடன் பொரளை – மகசின் வீதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.
இத்தகவலை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகசின் வீதியில் நேற்று கொழும்பு தெற்கு பிரிவுக்குச் சொந்தமான குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.