எந்த வயது பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது தெரியுமா?

ஆணோ, பெண்ணோ அனைவருக்குமே ஆரோக்கியமாய் வாழ வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். இன்று உலகம் முழுவதும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு நோய் என்றால் அது இதய நோய்தான். அதிலும் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெண்களுக்கு இதயம் தொடர்பான நோய் ஏற்பட வயது ஒரு தடையில்லை. 20 வயது முதல் தொடங்கி கிட்டத்தட்ட அவர்கள் இறக்கும் வரை எந்த வயதில் வேண்டுமென்றாலும் இதய நோய்கள் ஏற்படலாம். ஒவ்வொரு வயதிலும் அந்த காலகட்டத்திற்கு ஏற்றாற்போல இதயத்தை பெண்கள் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வயதிற்கும் இதயத்தை பராமரிக்க என சில குறிப்பிட்ட வழிகள் உள்ளது. அந்த வழிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

20-30 வயதில் உள்ள பெண்கள்
முதல் குழந்தையை பெறும் இந்த வயதில் உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். இந்த காலகட்டத்தில் உங்கள் உடலில் குறைவான கொழுப்புகளே இருக்கும். அதற்கு நீங்கள் ஈஸ்ட்ரோஜனுக்குத்தான் நன்றிகூறவேண்டும். சக்திவாய்ந்த இந்த ஹார்மோன் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்கும். இருப்பினும் கர்ப்பகாலத்தில் உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை 9 மாதங்களுக்கு முன்னரே நீங்கள் குழந்தை பெற்றால் உங்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. கர்ப்பத்திற்கு பிந்தைய காலம் குறைபிரசவத்தில் குழந்தை பெற்ற அம்மாக்களுக்கு இதயம் செயலிழக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகரிக்கிறது, இதய நோய் ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு, மரணம் கூட ஏற்படவாய்ப்புள்ளது. பிரசவத்திற்கு பின் உங்கள் இரத்த அழுத்தம் சகஜ நிலைக்கு வந்தாலும் உங்களுக்கு இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
முதலில் மருத்துவரை பார்க்கவேண்டும். நீங்கள் உயர் இரத்த அழுத்தம், பிரீக்லம்பாசியா, நீரிழிவு அல்லது குழந்தை பிறக்கும் முறையில் பிரச்சினை போன்றவை இருந்தால் உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகவேண்டும். முடிந்தால் இதய மருத்துவரையும் அணுகுங்கள். ஆபத்தான காரணிகளை சரிசெய்ய முயலுங்கள், இரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு போன்றவற்றின் அளவுகளை சீரான இடைவெளியில் சோதிக்கவும்.

இதய ஆரோக்கியத்திற்காக சாப்பிடுங்கள் உங்கள் இதய ஆரோக்கியத்திற்காக சிறப்பான உணவுமுறையை பின்பற்ற தொடங்குங்கள். குறிப்பாக காய்கறிகள், தானியங்கள், பழங்கள், மீன், நிறைவுறா கொழுப்புகள் உள்ள பொருட்களான ஆலிவ் ஆயில் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.உங்கள் தமனிகளையும், இதயத்தையும் பாதுகாக்க இந்த வயதில் உணவுகள்தான் அடிப்படைதேவை.

கட்டுக்கோப்பான உடலமைப்பு கண்டிப்பாக புகைபிடிக்கக்கூடாது. ஒரு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடமாவது ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்யவேண்டும். ஆரம்பகால கட்டத்திலேயே இந்த பயிற்சியை செய்வது பின்னாளில் உங்கள் உயிரை காப்பாற்ற உதவும். இது உங்களுக்கு ஓய்வில்லாமல் வேலை செய்யவேண்டிய நேரமாக இருக்கலாம், ஆனால் உங்கள் வேலைகளில் இதனை மறந்துவிடாதீர்கள். 40 களில் இருக்கும் பெண்கள் உங்களுக்கு இதய பிரச்சினைகள் ஆர்மபிக்கும் காலம் இந்த காலகட்டம்தான். குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் கடமை, வேலைப்பளு என்று உங்கள் மீதான சுமைகள் இந்த தருணத்தில் அதிகமாக இருக்கும். இருப்பினும் உங்கள் இதயத்தை பராமரிக்க வேண்டியது உங்கள் கடமையாகும். சிறந்த சலுகைகள் இந்த வாரம் வெள்ளிக்கிழமை உடன் முடிவடைகிறது ஆன்லைனில் குறைந்த விலையில் சிறந்த கிச்சன், டைனிங் பொருட்கள்! ஷாப்பிங் ரொம்ப ஈஸி! இப்போ ஆன்லைனில் எலக்ட்ரானிக்ஸ் கடைகள்!! என்ன செய்ய வேண்டும்? சீரான இடைவெளியில் மருத்துவரை அணுகி உங்கள் இரத்த அழுத்தம், இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ், கொழுப்பு அளவு மற்றும் BMI போன்றவற்றை சோதனை செய்யவேண்டியது அவசியம். உங்கள் உடலமைப்புக்கும், வயதிற்கும் ஏற்றாற்போல உணவுமுறையை மாற்றியமைக்க வேண்டும். மேலும் உங்கள் உடலில் சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவை எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதற்கான அட்டவணை உள்ளது. மொத்த கொழுப்பு 200 mg/dl அளவு இருக்க வேண்டும். LDL கொழுப்பு 100 mg/dl இருக்க வேண்டும், HDL என்னும் நல்ல கொழுப்பு 50 mg/dl என்ற அளவில் இருக்க வேண்டும். ட்ரைகிளிசரைடுகள் 150 mg / dl, இரத்த அழுத்தம் 120/80 எனவும், சர்க்கரை 100க்கு குறைவாகவும், BMI 25க்கு குறைவாகவும் இருக்க வேண்டும். 50-60 வயது பெண்கள் இந்த வயதுகளில் மாதவிடாய் பெரும்பாலான பெண்களுக்கு நின்றிருக்கும். எனவே இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவு, இரத்த அழுத்தம் அதிகரித்திருக்கும், LDL கொழுப்புகள், HDL கொழுப்புகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் என அனைத்தின் அளவும் குறைந்திருக்கும். எனவே உங்களுக்கு இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் மிகஅதிகமாக இருக்கும். MOST READ: முக்கியமான சமயத்துல மாதவிடாய் வந்திடுச்சா?… வந்தபின் மாத்திரை இல்லாம எப்படி நிறுத்தலாம்? ஹார்மோன் தெரபியை தவிர்க்கவும் உங்கள் கருப்பையில் உற்பத்தியாகும் ஈஸ்ட்ரோஜன் உங்கள் இதயத்திற்கு பாதுகாப்பை வழங்கும். ஈஸ்ட்ரோஜன் குறையும்போது அது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். ஆய்வுகளின் படி மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு ஹார்மோன் தெரபி சிகிச்சையை எடுத்துக்கொள்வது எந்த விதத்திலும் இதயத்திற்கு பாதுகாப்பை வழங்காது. உலகம் முழுவதும் இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 61 சதவீதத்தினர் 60 வயதுகளுக்கு மேல் உள்ளவர். எனவே இந்த காலகட்டத்தில் உடற்பயிற்சியும், சீரான உணவும் அவசியம். இரத்த அழுத்தத்தையும், உடல் BMI-யும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal