பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் பொமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெண்களைத் தாக்குவது மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள நபர் கடுமையான தவறு செய்துவிட்டார்.

எனவே இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal