
தேவையான பொருட்கள்
கடலை மா -02 கப்
நெய் – 2 டீஸ்பூன்,
சர்க்கரை – 3 கப்,
தண்ணீர் – ஒன்றரை கப்,
பொடி செய்த ஏலக்காய், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, கலர் – சிறிதளவு,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை :
- சர்க்கரையுடன் தண்ணீரை சேர்த்து பாகு காய்ச்சவும்.
- கடலை மாவு, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசைந்து, ஃபுட் கலர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
- பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் மாவை ஒரு பூந்தி கரண்டியில் கொட்டி, நேராக சூடான எண்ணெயின் மேல் கரண்டியை வைத்து, மற்றொரு கரண்டியால் பலமாக தட்டினால் முத்து முத்தாக விழும்.
- இதை பொன்னிறமாகப் பொரித்து, உடனேயே சர்க்கரைப் பாகில் போட்டு… பாகிலிருந்து பூந்திகளை எடுத்து ஒரு தட்டில் கொட்டி, பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, குங்குமப்பூ ஆகியவற்றைக் கலந்து லட்டு பிடிக்கவும்.
- சுவையான சத்தான பூந்தி லட்டு ரெடி.