
புத்தொளி வீசிடும்
புத்தாண்டு திருநாளில்
இன்பங்கள் துலங்கி,
துன்பங்கள் விலகி
எண்ணங்கள் யாவும்
வண்ணமாய் சிறந்து
பண்ணொடு இசையாய்
பனுவலின் அழகாய்
புதுமைகள் தனையே
பலவிதம் படைத்து
இசையென வாழ்வை
இதமாய் ரசித்தே
நாளிகை யாவும்
நாதமாய் சிறக்க
புத்தொளி வீசிடும்
புத்தாண்டு திருநாளில்
அன்புசார் அகில
உறவுகள் அனைவர்க்கும்
எமதகம் நிறைந்த
இனிய வாழ்த்துகள்…….!!