
சிங்கள-தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக, 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் இடம்பெற்ற சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே இவ்வாறு கொடுப்பனவுகள் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது