மட்டக்களப்பில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாகரை, காரமுனையில் வெளி மாவட்ட சிங்கள மக்களை மிகவும் இரகசியமான முறையில் திட்டமிட்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில் குடியேற்ற எடுத்த முயற்சியை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆர்ப்பாட்டமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் மட்டக்களப்பு – வாகரை பகுதியில் இரகசிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் சிங்கள மக்கள் ஈடுபட்டு வருவதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவங்கள் இடம் பெறும் போது பிள்ளையான் – வியாழேந்திரன் ஆகியோரை மாவட்டத்தில் காணவில்லை என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.