இலங்கைத் தமிழ் பின்னணி கொண்டவரான ரொமேஷ் ரங்கநாதன் (Romesh Ranganathan 43), ஒரு நடிகர், நகைச்சுவையாளர் என பிரித்தானியாவில் பிரபலமாக அறியப்பட்டவர்.

பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியவரான ரங்கநாதன், நேற்றுமுன்தினம் வெளிப்படையாக பொது இடம் ஒன்றில் இனரீதியாக அவமதிக்கப்பட்டார்.

லண்டனிலுள்ள Hammersmith Apollo அரங்கில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார் ரங்கநாதன். அப்போது இனவெறுப்பு தொடர்பான ஒரு பேச்சு வந்திருக்கிறது.

அப்போது, அரங்கில் அமர்ந்திருந்த ஒரு பெண் எழுந்து நேரடியாக ரங்கநாதனை இனரீதியாக கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்.

ஒரு கட்டத்துக்குமேல் அதைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் ரங்கநாதன் பாதுகாவலர்களை அழைக்க, அவர்கள் வந்து அந்தப் பெண்ணை அரங்கத்திலிருந்து வெளியேற்றினார்கள்.

ஒரு பக்கம் ஒரு பெண் இனரீதியாக விமர்சித்த விடயம் வேதனையை ஏற்படுத்தியது என்றாலும், மறுபக்கம், அந்த பெண்ணுக்கு எதிராக மொத்த அரங்கமும் ’கிளம்பு, காற்று வரட்டும்’ என்ற தொனியில் முழங்கியதையும், வெளியாகிய வீடியோ ஒன்றில் காண முடிகிறது.

இடையூறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்ட ரங்கநாதன், அதே நேரத்தில், தனக்கு ஆதரவாக குரல் எழுப்பிய மக்களுக்கு தன் பாணியில் நகைச்சுவையாக நன்றியும் தெரிவித்துக்கொள்ள, நிகழ்ச்சி தொடர்ந்தது.  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal