பிரான்ஸ் நாட்டில் புதிதாக ஒரு மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த புதிய வைரஸ், 46 மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஆகவே, அது தடுப்பூசிகளை எதிர்க்கக்கூடியதாகவும், அதிக தொற்றும் திறன் கொண்டதாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது.

பிரான்சிலுள்ள Marseille நகரில் இதுவரை இந்த புதிய வைரஸால் 12 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களில் முதல் நபர் ஆப்பிரிக்க நாடான கேமரூன் நாட்டுக்குச் சென்று திரும்பியவர் ஆவார்.

இந்த புதிய மரபணு மாற்ற கொரோனா வைரஸை IHU Mediterranee Infection என்ற அமைப்பின் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். டிசம்பர் 10ஆம் திகதி அந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்குப்பின் இந்த வைரஸ் வேகமாக பரவியதாக தெரியவில்லை.

மேலும், அந்த வைரஸ் வேறு எந்த நாடுகளிலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவும் இல்லை, உலக சுகாதார அமைப்பும் அதை இன்னமும் சோதனைக்காக எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கவும் இல்லை.

IHU Mediterranee Infection அமைப்பின் அறிவியலாளர்கள் குழுவின் தலைவரான பேராசிரியர் Philippe Colson கூறும்போது, இந்த புதிய கொரோனா வைரஸ் Marseille பகுதியில் பலரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தாங்கள் IHU மரபணு மாற்ற கொரோனா வைரஸ் என்று பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x