பிரான்சில் பொது போக்குவரத்துகளில் அதிக திருட்டு நடைபெறும் மாகாணத்தில் இல் து பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது.

பிரான்சில் இருக்கும் பல்வேறு மாகாணங்களில் பொது போக்குவரத்துகளில் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. மூன்றில் இரண்டு திருட்டு பொது போக்குவரத்துகளிலே நடைபெறுகிறது.

இந்நிலையில், Service statistique ministériel de la sécurité intérieure (SSMSI) வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் அதிகளவு திருட்டுக்கள் இடம்பெறும் மாகாணங்களில் வரிசையில், இல் து பிரான்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இல் து பிரான்ஸில் தினந்தோறும் 1.3 மில்லியன் பயணிகள் பொது போக்குவரத்தினை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் மட்டும் இங்கு 116430 பயணிகளிடம் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

பிரான்சில் இந்த மாகாணத்தில் திருட்டு சம்பவம் அதிகம்! வெளியான எச்சரிக்கை தகவல்

இந்த திருட்டுக்களில் அதிகம் பாதிக்கப்படுவது 18 முதல் 29 வயதிற்குட்பட்ட இளம் பயணிகளே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal