
மனித நுகர்வுக்கு தகுதியற்ற வகையில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்த தயாராக இருந்த ஐஸ்கிரீம், தயிர் மற்றும் சாக்லேட் வெண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெலவத்த பொது சுகாதார ஆய்வாளர் கே.கே.ஏ மதுஜித் இத்தகவலை தெரிவித்தார்.
மனித நுகர்வுக்கு தகுதியற்ற பதார்த்தங்கள் இந்த உணவுகளில் நுண்ணுயிரிகளாக இருப்பதாலும், அவை சரியான வெப்பநிலையில் சேமிக்கப்படாததாலும் அவை அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு அழிக்கப்பட்ட உணவுப் பங்கின் மதிப்பு சுமார் 600,000 ரூபாய் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அழிக்கப்பட்ட ஐஸ்கிரிம்கள் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் விநியோகிக்க தயாராக இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.