
தேவையான பொருட்கள்
- ரவை – 1/2 கப்
- சர்க்கரை – 1/2 கப்
- பால் – 2 கப்
- நெய் – 10 மில்லி
- முந்திரி – 5
- பாதாம் பருப்பு- 5
- உலர் திராட்சை – 10
- ஏலக்காய்த் தூள் – 1 ஸ்பூன்
- குங்குமப்பூ – சிறிதளவு
செய்முறை:
- வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம் பருப்பு, உலர் திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
- வெறும் வாணலியில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- அடுத்து பாலில் குங்குமப்பூவைச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து பாலைக் கொதிக்கவைத்து ரவையைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- அடுத்து குங்குமப்பூ- பால் சேர்த்து, சர்க்கரை சேர்த்து நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- அடுத்து ஏலக்காய்த் தூள், முந்திரி, பாதாம் பருப்பு, உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சுவையான பால் ரவா கேசரி ரெடி.