பாலில் சுவைக்காக சேர்க்கப்படும் சர்க்கரையை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக தேனை கலந்து சாப்பிடுவதால் சுவையோடு கூடிய நன்மைகளும் கிடைக்கின்றன.
கால்சியம் மிகுதியாக உள்ள பொருள் தான் பால். இந்த பாலானது உடலின் எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை வலுவாக இருக்க செய்யும். மேலும் இதில் உள்ள பொட்டாசியமானது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் அத்தியாவசிய பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாலுடன் தேனைக் கலந்து சாப்பிடும்போது சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை அறவே கட்டுப்படுத்துகிறது.

மேலும் சூடான பாலோடு தேனினைக் கலந்து பருகும்போது அவை தொண்டை புண்களுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும். நமது பாரம்பரிய முறைகளில் சளி,இருமல் தொல்லைகளுக்கு இந்த கலவையே பயன்படுத்தப்பட்டு வந்தன. பால், தேன் கலந்த இந்த பானத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயிற்றில் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன.

இது நல்ல குடல் பாக்டீரியாவை மீட்டெடுக்க உதவுகிறது. மேலும், எந்த வயிற்று பிரச்சனைகளிடம் இருந்தும் உங்களை மீட்க இந்த பானம் உதவுகிறது. குளிர்ந்த பால் மற்றும் தென் நன்மைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தேன் வளர் சிதை விகிதத்தை அதிகரிக்க உதவுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட இவை உதவுகின்றன.