பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் பாம்பு தீண்டிய பின்பு என்ன செய்தார் என்ற காணொளி சமீபத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் முன்பு அவர் பேசிய கடைசி வார்த்தைகள் என்னென்ன என்ற தகவல் வெளியாகி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் பல ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளார்.

இந்நிலையில், கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த ராஜ நாகத்தினை பிடிக்க சென்ற வாவா சுரேஷை பாம்பு கடித்துள்ளது.

வாவா சுரேஷ் குறித்த பாம்பை பிடித்து பைக்குள் போடும் போது ஏற்பட்ட, திடீர் அசம்பாவித காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சையில் சிகிச்சை பெற்று வாவா சுரேஷ் தன்னை கடித்த பின்பு கீழே விட்ட பாம்பை மீண்டும் பிடித்து போத்தலில் அடைத்த பின்பே மருத்துவமனைக்கு சென்றுள்ள காட்சியும் நேற்று வெளியாகி அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் பாம்பு கடித்த பின்பு, வாவா சுரேஷ் பேசிய வார்த்தைகள் என்ன என்பது தெரியவந்துள்ளது.

பாம்பு கடித்த பின்பு வாவா சுரேஷ் என்ன செய்தார்?

தன்னை கடித்த பகுதியில் இருந்த விஷத்தினை ரத்தத்துடன் பிதுக்கி எடுத்த அவர், மீண்டும் அப்பாம்பை பிடித்து போத்தலில் அடைத்துள்ளார்.

பின்பு கடிபட்ட இடத்திலிருந்து ரத்தத்தினை வெளியேறிய அதன் மேலே துணியை வைத்து கட்டியுள்ளார்.

அதன் பின்பு இந்த பாம்பு மிகவும் மோசமான பாம்பு என்றும் தன்னை பலமாகவே கடித்துவிட்டது என்றும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தன்னை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிடுங்கள் என்று பதற்றத்துடன் தன் பக்கத்தில் இருந்த பஞ்சாயத்து தலைவரிடம் கூறியுள்ளார்.

உடனே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற வேளையில், இந்த காரின் வேகம் போதவில்லை… இதனை நிறுத்தாமல் வேற கார் வரவழைத்து என்னை மாற்றிவிடுங்க… உடனே மருத்துவமனைக்கு போக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தான் மயக்கத்திற்கு செல்லும் தருணத்தில் தனது குடும்பத்தினை நினைத்து கண்கலங்கிய வாவா சுரேஷ், தனது மார்பில் தட்டியபடியே எனது கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டிக்கொண்டு வருகின்றது… நேரத்தினை வீணடிக்க வேண்டாம்… அதிக நேரம் இல்லை.. இன்னும் வேகமாக செல்லுங்கள் என்று தனது நிலையினைக் குறித்து அவர் கணித்துக கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மேலும் மருத்துவமனைக்கு செல்லும் முன்பு நான் முழுமையாக மயங்கிவிடுவேன் என்றும் தனது உடலில் எந்தவொரு அசைவும் இருக்காது என்றும் அதனால் இப்பவே மருத்துவமனைக்கு போன் செய்து எல்லாம் தயாராக இருக்க ஏற்பாடுகள் செய்திடுங்க என்று கூறியுள்ளார்.

வாவா சுரேஷின் கடைசிநேர இந்த வார்த்தைகள் மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கும் வாவா சுரேஷிற்காக மக்கள் பிரார்த்தனை செய்து வருவதோடு, கேரள கோவில்களில் சிறப்பு பூஜையும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal