பரந்தனில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி ஏ – 09 நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புத்தாண்டு தினத்தில் நால்வர் கொண்ட குழுவினரால் இளைஞர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தை அவதானித்த அவருடைய மருமகன் அதனை தடுத்து நிறுத்தச் சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Gallery

இந்த நிலையில் தாக்குதல் சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

அதேவெளை உயிரிழந்தவரின் மருத்துவ பரிசோதனையின் பின்னர் குடும்பத்தாரிடம் சடலம் கையளிக்கப்பட்டிருந்தது. சடலத்தை சுமந்துவந்த உறவினர்கள் தற்போது பரந்தன் சந்தியில் சடலத்தை வைத்து ஏ – 09 நெடுஞ்சாலையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் பரந்தன் சந்திப் பகுதியில் பெரும் குழப்ப நிலை நீடிப்பதுடன் மக்களின் போராட்டத்தால் ஏ – 09 நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மக்களுடன் சமரசத்தில் ஈடுபடுவதற்காக பொலிஸ் அதிகாரிகள் அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடி வருகின்ற போதிலும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வரும் வரையில் தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என போராட்டத்தி ஈடுபடுவரகள் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Gallery
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal