தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னனி நடிகராக ஆர்யா உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டெடி திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளிவந்த நிலையில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ஆர்யா டெடி படம் இயக்கிய சக்தி சௌந்தர்ராஜனுடன் இன்னொரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இமான் இசையமைக்க போகும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் புகழ் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளார்.
இந்த படமே இன்னும் தயாராகாத நிலையில் படத்திற்கான சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை கோடிகள் கொடுத்து வாங்க பல நிறுவனங்கள் இப்பொழுதே போட்டிப்போட்டு வருகின்றன என தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெடி படத்தின் வெற்றியே இந்த படத்தின் இத்தனை டிமாண்டிற்கும் காரணம் என கூறப்படுகிறது.