பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
குறித்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். நேற்று பத்தமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றம் வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல தடவைகள் அழைப்பு விடுத்திருந்ததாகவும் ஜகத் குமார தெரிவித்தார்.
அதோடு எதிர்வரும் தினங்களில் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவிப்பார் என தாம் நம்புவதாகவும் ஜகத் குமார இதன்போது மேலும் குறிப்பிட்டார்.