
பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு பாடசாலையில், குறைந்தது 30 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.
தலைநகர் லாகோஸிலிருந்து கிட்டத்தட்ட 400 மைல் தொலைவில் உள்ள கடுனாவின் புறநகரில் உள்ள வனவியல் இயந்திரமயமாக்கல் கல்லூரியில் இருந்து மாணவர்கள் கடத்தப்பட்டனர்.
வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த கும்பல் தாக்கியதாக கடுனா மாநில பாதுகாப்பு ஆணையர் சாமுவேல் அருவான் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு வடக்கு நைஜீரியாவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மாணவர்களை கடத்திச் செல்லும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
முன்னதாக கடந்த 2 வாரங்களுக்கு முன் ஜம்பாரா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 279 மாணவிகள் கடத்தப்பட்டதும், பின்னர் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.