
இமோ மாநிலத்தில் உள்ள ஓஹாஜி-எக்பேமா உள்ளூர் அரசாங்கப் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.
தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவத்தினால், நாடு அதிர்ச்சியில் உள்ளதாகவும், இந்த சம்பவம் பேரழிவு மற்றும் தேசிய பேரழிவு என்றும் ஜனாதிபதி முஹம்மது புஹாரி விபரித்ததுடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் வெடிப்புகளுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.