
நாளை புனித ரமழான் நோன்பு ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1442 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது நாட்டின் எப்பிரதேசத்திலும் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஷஹ்பான் மாதத்தை 30ஆக பூரணப்படுத்தி நாளை மறுதினம் புனித நோன்பு ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.