
அண்டத்தின்
பெருவெளியில் தெறித்த
ஒரு துண்டு…!
இரவின் மடிவில்
முஹாரி பாடும்
வானத்து குயில்..!
சூரியனை கொள்ளை
கொண்ட இருளனை
எரித்திடும் ஒளிமகள்…!
அந்தகார அருவில்
ஆடையின்றி நீராடும்
கிளியோபட்ரா…!
இருள் நதியில்
நீந்திடும்
குளிர் தேவதை..!
நிலா அவளை
எதிர்பார்க்கும் நாளெல்லாம்
கரைகிறது மனம்
நினைவெனும்
அமிலக் கரைசலால்…
நிலவுஅவளை காணாத
நாட்களெல்லாம் நகர்கின்றன..
அமாவாசை இரவாக..?