
வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கின்ற AB31 நீள் சாலைக்கான (புலோலி – கொடிகாமம் – கச்சாய் விதி) காப்பற் செப்பனிடும் பணிகள் கொடிகாமத்தில் முடிவு நிலையை அண்மித்துள்ளன.
இந்திய நிறுவனம் ஒன்றால் கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதிக்கான செப்பனிடும் பணிகள் படிப்படியாக நடைபெறு வந்த நிலையில் தற்போது முடிவு கட்டத்தை அடைவது மகிழ்ச்சி அளிப்பதாக வடமராட்சி மற்றும் தென்மராட்சி மக்கள் கூறுகின்றனர்.