மகளின் திருமணம் நிற்ககூடாது என்பதற்காக தந்தை படகை ஒன்று வாடகைக்கு எடுத்து மேடையாக அமைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள தகழியைச் சேர்ந்த பெண் ஆதிரா. இவருக்கும், செங்கனூரைச் சேர்ந்த அகிலு என்பவருக்கும் திருமணம் செய்வதாக கடந்த மாதம் 23-ந் தேதி ஒரு மண்டபத்தில் திருமணம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் திருமணத்தை இருவீட்டாரும் கலந்து பேசி தள்ளி வைத்தனர்.

இதனிடையே, மணமகளின் இல்லத்தில் எளிமையான முறையில் மணமக்களுக்கு திருமணம் நடத்துவதாக இருவீட்டாரும் முடிவு செய்தனர்.

ஆனால், மணமகள் ஊரில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள மணப்பெண்ணின் வீட்டில் தண்ணீர் புகுந்து திருமணத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் திருமணம் தடைப்படுகிறதே என மணப்பெண்னான ஆதிரா பயங்கர மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இதைக்கண்ட ஆதிராவின் தந்தை, மகளின் மனநிலையை புரிந்து திருமணத்தை குறித்த தேதியில் எப்படியாவது நடத்த வேண்டும் என முயன்றார்.

இதையடுத்து, வீட்டில் திருமணத்தை நடத்த வேற வழியில் யோசித்த அவர், ஒரு படகைத் திருமண மேடையாக மாற்ற முடிவெடுத்தார்.

இதற்காக ஒரு பெரிய படகை 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து, அதில் திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்து மாப்பிள்ளை வீட்டாரின் சம்மதத்துடன், மிதக்கும் படகு முழுவதும் பூக்கள் அலங்கரிக்கபட்டு கோலாகலமாக மணமக்களின் திருமணம் நடத்தியுள்ளார்.

மேலும், இந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்டு பங்கேற்றனர்.

இதன்பின்னர், மகளின் திருமணம் நின்று விடக் கூடாது என்பதற்காக தந்தை செய்த செயல் அனைத்து மக்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டும் மற்றும் அந்த தந்தைக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.      

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal