தமிழகத்தில் சாமியார் நித்தியானந்தாவின் பரப்ரப்பு ஒருபக்கம் இருக்க தற்போது புதிதாக அன்னபூரணியின் ஆதிபராசக்தி எனும் புது அவதாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான குடும்ப பின்னணியை கொண்ட ஓர் நிகழ்ச்சி மக்களிடையே மிக பிரபலம். லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் பங்கேற்றவர் அன்னபூரணி. மரு திருமணம் செய்வதற்கு தன் கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என கோரி அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில் அந்த அன்னபூரணி இன்றைக்கு ஆன்மிக அவதாரம் எடுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் தன்னைத் தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று சொல்லிக் கொள்கிறார் அன்னபூரணி . அவரது காலில் விழுந்து மக்களும் ஆசி வாங்கிச் செல்கிறார்கள்.

அன்னபூரணியின் அருளாசிகள் ஒரு பக்கம் வைரலாகி வர, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்னபூரணியின் நிகழ்ச்சியும் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேவேளை அன்னபூரணி தன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களுக்கும் எல்லாம் வல்ல சக்தியான நம் அம்மா அருளாசி கொடுக்க இருக்கிறார்.

ஜனவரி 1ஆம் தேதி சனிக்கிழமை அம்மாவின் திவ்யதரிசனம் அனைத்து மக்களுக்கும் நடைபெற இருக்கிறது. தரிசனத்திற்கு அனுமதி இலவசம் என்றெல்லாம் அவரது பக்தர்கள் விளம்பரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இதையெல்லாம் பார்க்கும்போது தனக்கு சிரிப்புதான் வருகிறதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்திய லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதோடு ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை இப்படியான ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை அன்னபூரணியின் இந்த  புது அவதாரம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாகி வைரலாகி வருகின்றது.

Gallery
Gallery
Gallery
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal