
மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், தடுப்பூசியால் அவருக்கு மாரடைந்து ஏற்படவில்லை என மருத்துவமனை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், எக்மோ கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு, முற்றுமுழுதாக இதயம் தொடர்பான பிரச்சினையே உள்ளதாகவும் கொரோனா தடுப்பூசியால் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் மருத்துவமனை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.