
வலைகள் பற்றியோ
தூண்டில்கள் பற்றியோ பயமின்றி
தனக்கானக் குறுகிய எல்லையை
தொலைவென நினைத்து நீந்தும்..
நிலம் மட்டுமல்ல
நீரும் கல்லறைதான் என்பதை மறந்து…
கண்ணாடிக் குடுவைக்குள்
தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்
வாஸ்து மீனின்…
கனவின் திரவ வடிவம் தான்
நீர் என்றறியாமல்
மௌனமாய் சொட்டும் கண்ணீரில்
கரைத்துக்கொள்கிறது
தன் கவலைகளை…
இங்கும் அங்கும் நீந்தி
மறுபடி மறுபடி கண்ணாடியில் போய்
முட்டிக்கொள்ளும்
அந்தத் தொட்டி மீன்களை
இரண்டு நிமிடங்களுக்கு மேல்
ஏனோ ரசிக்க முடியவில்லை என்னால்..
எழுதியவர் : சசிகலா திருமால்